ஆளுமை:சிதம்பரப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:05, 26 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிதம்பரப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிதம்பரப்பிள்ளை |
பிறப்பு | 1931.05.25 |
இறப்பு | 2009.06.23 |
ஊர் | கரவெட்டி |
வகை | கூட்டுறவாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரப்பிள்ளை (1931.05.25 - 2009.06.23) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கூட்டுறவாளர். இவர் யாழ்ப்பாணம் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாசாலையிலும், யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் கணிதத்தில் விசேட ஆசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார். மன்னார், நெடுந்தீவு, பொலிகண்டி, நெல்லியடி ஆகிய இடங்களில் இவர் கணித ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
தொழிலுக்காக இவர் ஆசிர்யத் தொழிலை செய்த போதும் தன் வாழ்நாளில் இறுதி நாற்பது ஆண்டுகள் கூட்டுறவாளனாகவே கடமையாற்றியுள்ளார். 2009இலிருந்து அவரது மறைவுக் காலம் வரை கட்டைவேலி நெல்லியடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக இருந்து அதனை உருவாக்கி முன்னேற்றமடையவைத்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 5973 பக்கங்கள் 36-37