ஆளுமை:அனந்தராஜ், நடராஜா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:34, 25 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அனந்தராஜ்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அனந்தராஜ்
தந்தை நடராஜா
தாய் குணலக்சுமி
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனந்தராஜ், நடராஜா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் குணலக்சுமி. வல்வெட்டித்துறை அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லுரியிலும் இவர் கல்வி கற்றார். தொடர்ந்து கலைமாணி, முதுமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, ஊடகத்துறையில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, மற்றும் ஊடகத்துறையில் முதுமாணிப் பட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பட்டங்களையும், கல்வி முகாமைத்தவத் துறையில் முதலாம் தர அதிபர் சேவை, மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையையும் இவர் பெற்றுள்ளார். தனது இருபத்து மூன்று வயதில் ஆசிரியராகத் தனது கல்விச் சேவையை ஆரம்பித்த அனந்தராஜ் பின்னர் அதிபராக, கொத்தணி அதிபராக, உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றியுள்ளார்.

வடபுல நாட்டார் வழக்கு, அறிவியல் உண்மைகள், ஈழத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், முகாமைத்துவ நுட்பங்கள், கூழ்நியாயம், பாதசரம், நீரலைகள், தேசியத்தை நோக்கிய கல்வி, உதிரம் உறைந்த மண் (நாகர்கோயில் மாணவப்படுகொலைக் கதை), வல்வைப் படுகொலைகள், India’s Mylai – Valvettiturai Massacre (ஆங்கிலத்தில்), இந்திய இராணுவத்தின் வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பான புகைப்படங்களுடனும், சத்தியக் கடதாசிகளுடனும் வெளியிடப்பட்ட முழுமையான ஆவணம், அன்னபூரணியின் அமெரிக்கப்பயணம், சந்நிதிச் செல்வம், பாடசாலை, முகாமைத்துவம், பொது விவேகம் ஆகிய பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்