ஆளுமை:லோகநாதன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 16 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லோகநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லோகநாதன்
தந்தை செல்லையா
தாய் தங்கமுத்து
பிறப்பு 1913.09.19
இறப்பு 1981.05.04
ஊர் புலோலி
வகை வங்கியியலளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகநாதன், செல்லையா (1913.09.19 - 1981.05.304) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த வங்கியியலாளர். இவரது தந்தை செல்லையா; தாய் தங்கமுத்து. இவர் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்று தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியில் உயர் கல்வி கற்றார். லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பம்பாயில் உள்ள சர்வதேச கலாசாலையில் வர்த்தமாணிப் பட்டம் பெற்ற இவர் அங்குள்ள வங்கியாளர் பயிற்சி நிறுவனத்தில் பயின்று ஆசியாவிலே முதல் மணவனாக பரீட்சையில் சித்தி அடைந்ததோடு லண்டனில் உள்ள Barclays Bank இல் பயிற்சியாளராக இருக்கும் போதே Associateship of the Institute of Bankers என்ற பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

1939ஆம் ஆண்டளவில் இலங்கை வங்கியில் பணியாற்றத் தொடங்கிய இவர் 1952இல் தனது முப்பத்தொன்பதாவது வயதில் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரகவும் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பதவி வகித்தார். மேலும் பல பதவிகளையும் வகித்த இவர் 1973இல் நியூயோர்க் நகரில் Development Savings Bank and the Third World , Asia Dilemma ஆகிய நூல்களை வெளியீடும் செய்துள்ளார். Financial Times of Sri lanka என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய Social and Economic Reform and Less Development Countris என்ற இவரது கட்டுரை பிரசித்திப் பெற்றிருந்தது. இவரது காலத்திலேயே இலங்கை வங்கியில் அதிகளவிலான தமிழர்களுக்கு நியமனம் கிடைத்தது.

வளங்கள்

  • நூலக எண்: 11850 பக்கங்கள் 59-60