ஆளுமை:பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:19, 16 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூரணம்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூரணம்பிள்ளை
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1909
ஊர் துன்னாலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூரணம்பிள்ளை, கணபதிப்பிள்ளை (1909 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. இவர் துன்னாலை மெதடிஸ்த பாடசாலையிலும் மெதடிஸ்த உயர்தர பெண்கள் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கல்வி கற்றார். தொடர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டப்படிப்பை மேற்கொண்டு சித்தி அடைந்துள்ளார்.

தனது குடும்பநிலை காரணமாக ஆரம்பத்தில் மாத்தளை கிறிஸ் கேச பாடசாலையில் ஆசிரியராக இணைந்த இவர் 1944இல் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றார். 1944 - 1967 வரை ஹாட்லிக் கல்லூரியிலும் 1967 - 1976 வரை சென் ஜோன்ஸ் கல்லூரியிலும் அதிபராக கடமையாற்றிய இவர் தனது 34 ஆவது வயதிலிருந்து 1944 - 1967 வரையாக 24 வருடங்களிற்கு மேல் அதிபராக பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11851 பக்கங்கள் 01-05