ஆளுமை:வேலுப்பிள்ளை, சி. வி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை
பிறப்பு 1914.09.14
இறப்பு 1983
ஊர் வட்டகொடை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, சி. வி. (1914.09.14 - 1983) வட்டகொடை மடக்கொம்பரை தோட்டத்தைச் சேர்ந்த கவிஞர்; நாவலாசிரியர்; தொழிற்சங்கவாதி; நாடாளுமன்ற உறுப்பினர். ஆரம்பக் கல்வியை அட்டன் மிஷனரி பாடசாலையிலும் பின்னர் உயர்கல்வியை கொழும்பு நாலந்தாக் கல்லூரியிலும் மேற்கொண்டார். நுவரேலியாவில் காமினி வித்தியாலயத்தில் ஓர் ஆங்கில ஆசிரியராகவும், இலங்கை இந்தியன் காங்கிரஸின் செயலாளராகவும் பதவி வகித்தவர்.

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த இவர் தன் ஆசிரியர் தொழிலுக்கு விடை கொடுத்துவிட்டு முழுநேரத் தொழிற்சங்கவாதியாகவும், இலக்கியவாதியாகவும் ஈடுபடலானார். காங்கிரஸ் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய வேளையில் Congress News என்ற தொழிற்சங்கப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். அக்காலகட்டத்தில் தான் 1946இல் "முதற்படி" என்ற சிறுநூலையும் எழுதியவர். மலையகத்தில் வாய்மொழியாக வழங்கி வந்த நாட்டுப்பாடல்களைத் தேடித்திரிந்து பெற்றுத் தமிழகத்தின் 'மஞ்சரி' சஞ்சிகையில் 1956இல் "தேயிலைத் தோட்டப் பாடல்கள்" என்ற தோடராக எழுதி வந்தவர். இலங்கையிலும், இந்தியாவிலும் வெளிவந்த ஆங்கிலச் சஞ்சிகைகளிலும் இவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்ற தலைப்பில் நூலாகவும் எழுதியிருந்தார்.

கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார். 1961 இல் வீரகேசரியில் "காலம் பதில் சொல்லட்டும், சாக்குக்காரன் என்ற இரு சிறுகதைகளை இவர் எழுதினார். 1947 இல் சோல்பரி அரசியல் சாசனப்படி இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்திலிருந்து சென்ற 7 பேரில் ஒருவராக தலவாக்கலை பிரதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்பு

வேலுப்பிள்ளை, சி. வி. பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 1663 பக்கங்கள் 36-40