ஆளுமை:யோகநாதன், தம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகநாதன்
தந்தை தம்பிப்பிள்ளை
பிறப்பு 1945.11.15
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகநாதன், தம்பிப்பிள்ளை (1945.11.15 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியர். இவ்ர் யாழ்ப்பாணம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் கல்விப் பயின்றார்.

இவர் 1963இல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் 6 உயரம் 4 அகலம் கொண்ட முருகன் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கும் ஓவியம் வரைந்து தனது ஓவியத்துறையில் தடம் பதித்தார். மேலும் ஜெசீமா பட விற்பனை நிலையத்திற்கு புதுமனைப் புகும் தெய்வீகப் படங்களை கண்ணாடிகளில் 1000ற்கும் மேற்பட்டளவில் வரைந்துள்ளார். இவரது திறமைக்காக 2008இல் கலாபூஷணம் விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 256