ஆளுமை:யசிந்தா, செல்வரட்ணம்
பெயர் | யசிந்தா செல்வரட்ணம் |
பிறப்பு | 1961.12.08 |
ஊர் | நல்லூர் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யசிந்தா செல்வரட்ணம் (1961.12.08 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவர் யாழ்ப்பாண வேம்படி உயர்தரக் கல்லூரியில் உயர் கல்வியை கற்று பின் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் கற்கை நெறியினை கற்றார். 1983இலிருந்து முழுநேர ஓவியராக இவர் கடமையாற்றியுள்ளார்.
இவர் வரைந்த முதல் ஓவியம் 1985இல் அன்னை இந்திரா காந்தியின் அஞ்சலி நிகழ்விற்காக அவரது உருவப்படத்தை திரைச்சீலையில் வரைந்தது ஆகும். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியத்துறையில் ஈடுபட்டு வந்துள்ள இவர் கடவுளின் படங்கள், மறைந்தவர்களின் திருவுருவப்படங்கள், திரைச்சேலைகள், சீனரிகள் என 600க்கும் மேற்பட்ட உயிரோட்டமான ஓவியங்களை வரைந்துள்ளார். மேலும் 1993இல் சுதுமலை அம்மன் ஆலயம், 1995இல் கலட்டி அம்மன் அம்மன் ஆலயம், 1997இல் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம், 1998இல் இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் ஆகியவற்றிற்கு உட்புறச் சுவர் ஓவியங்களை இவர் வரைந்துள்ளதோடு நல்லூர் கந்தசுவாமி ஆலயம், அத்தியடி பிள்ளையார் ஆலயம் போன்றவற்றிற்கு வசந்த மண்டப திரச்சீலை ஓவியங்களையும் இவர் வரைந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 254-255