ஆளுமை:செந்தூர்ராசா, சீனிவாசகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:23, 2 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செந்தூர்ரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செந்தூர்ராசா
தந்தை சீனிவாசகம்
பிறப்பு 1940.11.05
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்தூர்ராசா, சீனிவாசகம் (1940.11.05 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சீனிவாசகம். இவர் சித்திர மொழி வைரவர் கோயில், அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானம், மாத்தளை முருகன் கோயில், கொழும்பு கதிரேசன் கோயில், வவுனியா பிள்ளையார் கோயில், வட்டக்கச்சி கிருஷ்ணன் கோயில், புதுக்குடியிறுப்பு உலகளந்த பிள்ளையார் கோயில் ஆகிய ஆலயங்களில் பல சிற்பங்களை செதுக்கியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக சிற்ப சிகாமணி, சிற்ப கலாநிதி, சிற்ப வித்தக சிரோன்மணி, சிற்ப கலா நாயகன், சிற்ப சக்ரவர்த்தி, சிற்ப தத்துவ நிதி, சிற்ப சுரபி, சிற்ப வித்தகர், கலைவாரிதி, 2006இல் இலங்கை அரசினால் கலாபூஷணம் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 249