ஆளுமை:கலாமோகன், கிருஷ்ணபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 2 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கலாமோகன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலாமோகன்
தந்தை கிருஷ்ணபிள்ளை
பிறப்பு 1957.12.31
ஊர் புத்தூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாமோகன், கிருஷ்ணபிள்ளை (1957.12.31 - ) யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை கிருஷ்ணபிள்ளை. பாடசாலையில் படிக்கும் போதே ஓவியம், சிற்பம், மரத்திலான சிற்பங்கள் ஆகியவற்றை வடிவமைத்தார்.

1976இல் மாத்தளை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இவரது கலைப்பணி ஆரம்பனாதோடு தெல்லிப்பளை துர்க்கை அம்மன், இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார், சரசாலை நுணாவில் பிள்ளையார், சாவகச்சேரி முத்துமாரி அம்மன் ஆகிய ஆலயங்களில் தேர், வாகனம், கேடகம், கொடிமரம் போன்ற சிற்பங்களை செதுக்கியுள்ளார்.

இவரது திறமைக்காக சிற்பக் கலைச் செல்வன், சிற்ப கலாமணி, சிற்ப கலா இரத்தினம், சிற்ப கலா கேசரி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 240