ஆளுமை:இராசகுலசிங்கம், பொன்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசகுலசிங்கம்
தந்தை பொன்னையா
பிறப்பு 1945.11.14
ஊர் மீசாலை
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசகுலசிங்கம், பொன்னையா (1945.11.14 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை பொன்னையா. இவர் ச. பெனடிக் அவர்களிடம் 4 ஆண்டு காலங்கள் சித்திரம் தொடர்பான பாடநெறியைக் கற்றார்.

1973 - 1995வரை மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகத்தின் ஆஸ்தான சித்திரக் கலைஞராக கடமையாற்றியுள்ள இவர் 2004இல் நவீல்ட் பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் மீசாலை வெள்ளை மாவடிப் பிள்ளையார் ஆலயம், மிருசுவில் துர்க்கையம்மாள் ஆலயம், சாவகச்சேரி சப்பச்சி மாவடிப் பிள்ளையார் ஆலயம், கிளிநொச்சி நாகதம்பிரான் ஆலயம் போன்ற பல ஆலயங்களில் சமய சம்பந்தமான காட்சிகள், பெரிய திரையில் சுவாமிப் படங்கள் ஆகியவற்றை வரைந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 234