ஆளுமை:யசோதரா, விவேகானந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யசோதரா விவேகானந்தன்
பிறப்பு 1956.05.07
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதரா விவேகானந்தன் (1956.05.07 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாடனக் கலைஞர். இவர் 1974ஆம் ஆண்டிலிருந்து நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ளார். இவரது தாயின் நினைவாக உருவாக்கப்பட்ட திலக நர்த்தனாலயத்தினை 1974ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்துள்ளார்.

பிரதம பரீட்சகராகவும், வெளிவாரிப் பரீட்சகராகவும், வினாத்தாள் தயாரிப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளதோடு 16 வருடங்களாக ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றி அடிப்படை அறிவும் ஆரம்ப விளக்கமும் அடங்கிய பரதநாட்டியம் எனும் நூலை வெளியிட்டுள்ளார். நாட்டியக் கலைமணி, தென்மராட்சிப் பெருமகள் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 231