ஆளுமை:ஜேக்கப், வஸ்தியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:36, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜேக்கப்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜேக்கப்
தந்தை வஸ்தியாம்பிள்ளை
பிறப்பு 1939.12.07
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேக்கப், வஸ்தியாம்பிள்ளை (1939.12.07 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வஸ்தியாம்பிள்ளை. 1953இலிருந்து 46 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக் கூத்துக் கலையில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் 35க்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்கள் மற்றும் நாடகங்களிலும் ஏழு இசை நாடகங்களிலும் நடித்துள்ளார். பதினேழு நாட்டுக் கூத்து மற்றும் நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார். இலங்கை வானொலி, ரூபவாகினியின் பல்கலை அரங்குகளிலும் தன் கலைச்சிறப்பினை வெளிப்படுத்தி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ள இவர் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தில் நாட்டுக்கூத்திற்கு நிரந்தர மிருதங்க வித்துவானாக கடமையாற்றியுள்ளார்.

1978இல் தேசிய கலை வேந்தன், 1979இல் கலைப்பொக்கிஷம், 1981ல் சிம்மைக் குரலோன், 1988இல் கலைக்குரிசில், 1992இல் நாடகமாமன்னர், எழிலிசை மன்னன், 2001இல் கலைஞானகேசரி, 2002இல் யாழ்ரத்னா ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 216