ஆளுமை:மகாதேவா, பொன்னுச்சாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:38, 22 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகாதேவா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாதேவா
தந்தை பொன்னுச்சாமி
பிறப்பு 1942.04.25
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவா, பொன்னுச்சாமி (1942.04.25 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி. செ. பொன்னுச்சாமி அவர்களிடம் கலைப்பயிற்சிப் பெற்ற இவர் 1960ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

நாடகத்துறையைப் பொறுத்தவரையில் டிராமாஸ்கோப் வகையிலான பல நாடகங்களை தயாரித்து இயக்கி கதைவசனம் எழுதி பல நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்ததோடு மயிர்க்கூச்செறியும் சண்டைக்காட்சிகளிலும் நடித்துப் புகழ் பெற்றார். முடியாத முடிச்சு, தணியாத தாகம், அவனும் மனிதன் தான், தைமூர், சுதந்திர நாட்டு அடிமைகள், நீயுமா போன்ற இவர் நடித்த நாடகங்களாகும்.

1965ஆம் ஆண்டில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டியில் வடமராட்சியில் முதலாவது ஆணழகனாகத் தெரிவு செய்யப்பட்டு மிஸ்ரர் வடமராட்சி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 204