ஆளுமை:பேர்மினஸ், கிறகோரி பிலிப்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேர்மினஸ்
தந்தை கிறகோரி பிலிப்
பிறப்பு 1939.09.25
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேர்மினஸ், கிறகோரி பிலிப் (1939.09.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கிறகோரி பிலிப். 1956ஆம் ஆண்டில் இவர் பத்திரிசியார் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் ஆரம்பித்து அரங்குகளில் பிரவேசித்து திருமறைக் கலாமன்றம், நாடக அரங்கக் கல்லூரியில் பயிற்சிப் பெற்று கலையுலகில் பணியாற்றியுள்ளார்.

இவர் கலைத்துறையில் 50 வருடங்களுக்கு மேல் களப்பயிற்சி, நடிப்பு, ஒப்பனை, ஆடை அமைப்பு, நெறியாள்கை, தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டு இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றில் தமது கலைப்பணியை மேற்கொண்டுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2004இல் கலாபூஷண விருது, 2002இல் யாழ்ப்பாண கலாசாரப் பேரவையால் யாழ் ரத்னா, 2001இல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞானகேசரி, 2008இல் திருமறைக் கலாமன்றத்தினால் அரங்கவாரிதி, கலைஞான பூரணன் ஆகிய பட்டங்களைப் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 224-225
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 200