ஆளுமை:நற்குணம், வல்லி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நற்குணம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நற்குணம்
தந்தை வல்லி
பிறப்பு 1923.05.15
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நற்குணம், வல்லி (1923.05.15 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வல்லி. இவர் தனது 14ஆவது வயதிலிருந்து பிற்பாட்டு, மிருதங்கம், கரகம், காவடி, ஆட்டுவித்தல் போன்ற கலைகளில் ஈடுபட்டு ஒருசில பாடல்கள் இயற்றியுள்ளதுடன் கல்வெட்டுக்கள் பலவும் ஆக்கியுள்ளார்.

இவர் அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, அல்லி அருச்சுனா, ஞானசௌந்தரி, ஏழு பிள்ளைகள் நல்லதங்காள், பவளக்கொடி, பூதத்தம்பி, வள்ளி திருமணம், மார்க்கண்டேயர், கோவலன் கண்ணகி, பக்த நந்தனார், சாரங்கதாரா போன்ற பல நாடகங்களில் பிரதான ஆண் பாத்திரம் ஏற்று நடித்ததுடன் ஔவையாக பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

இவரது கலைப்பணிக்காக 1995ஆம் அண்டில் கலயரசு சொர்ணலிங்கத்தினால் நாடகத்திலகம் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 186-187
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நற்குணம்,_வல்லி&oldid=172197" இருந்து மீள்விக்கப்பட்டது