ஆளுமை:நந்தகோபாலன், வேலாயுதம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நந்தகோபாலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நந்தகோபாலன்
தந்தை வேலாயுதம்பிள்ளை
பிறப்பு 1960.12.02
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நந்தகோபாலன், வேலாயுதம்பிள்ளை (1960.12.02 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம்பிள்ளை. இவர் அண்ணாவியார் சரவணமுத்து அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்று 1980ஆம் ஆண்டுலளிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

சிந்துநடைக்கூத்து, இசை நாடகங்கள் போன்றனவற்றில் இவர் நடித்ததுடன் 1990ஆம் ஆண்டுகளில் அண்ணாவியாராக செயற்பட்டு வந்துள்ளார். மேலும் 15 வருடத்திற்கு மேலாக காத்தவராயன் சிந்து நடைக்கூத்தினை மேடையேற்றி வந்த இவர் மயானகாண்டம், சம்பூர்ண அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, ஶ்ரீ வள்ளி, பவளக்கொடி போன்ற இசை நாடகங்களை மன்றங்களுக்கும், சங்கக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கு நெறிப்படுத்தி மேடையேற்றி வந்துள்ளார்.

இவரது கலைப்பணிக்காக 1993ஆம் ஆண்டில் கற்கோவளம் கும்பி அம்மன் ஆலயத்தினாலும், 1998ஆம் ஆண்டில் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தினாலும், சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தினாலும் 2005ஆம் ஆண்டில் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையினாலும் பொன்னாடை போர்த்தியும், மகுடம் சூட்டியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 186