ஆளுமை:நடராஜா, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:44, 21 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1941.07.10
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, சின்னத்துரை (1941.07.10 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் ஏ. ரி. பொன்னுத்துரை, பொன் பரமானந்தன் ஆகியோரிடம் கலைப் பயிற்சி பெற்று நாடகம், படைப்பிலக்கியம், நாட்டிய நடகங்கள், பட்டிமன்றம் போன்ற பல துறைகளில் தடம் பதித்து வந்தார்.

சிறந்த நாடக ஆசிரியராகவும், நடிகராகவும் விளங்கிய இவர் ஆசிரியராகவும், அதிபரகவும் கடமையாற்றியுள்ளார். வசாவிளான மத்திய மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்து இயங்கிய வேளையில் கல்லூரின் வளர்ச்சிக்காக இவர் மேலும் கீழும் எனும் நாடகத்தினை இயற்றி மேடையேற்றி அதன் மூலம் லட்சம் ரூபா சேகரித்து பாடசாலையை இயக்கிய பெருமை இவருடையதாகும்.

இவரது கலைப்பணியை கௌரவிக்கும் முகமாக வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையினால் கலைச்சுடர் எனும் விருது இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 185