ஆளுமை:செல்வராசா, நல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்வராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வராசா
தந்தை நல்லையா
பிறப்பு 1934.09.29
ஊர் ஏழாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வராசா, நல்லையா (1934.09.29 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நல்லையா. ஆரம்பக் கல்வியை ஏழாலை சைவ வித்தியாசாலையிலும், உயர் கல்வியை சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயத்திலும் கற்ற இவர் இசை நாடகம், நாடகம் போன்ற கலைகளை இரத்தினசிங்கம், செல்லையா, வி. ரி. செல்வராசா ஆகியோரிடம் பயின்றார்.

ஶ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, பூதத்தம்பி, சாரங்கதாரன், நல்ல தங்காள், தூக்குத் தூக்கி, பக்த நந்தனார், பாமா விஜயம் போன்ற பல நாடகங்களை இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், தெல்லிப்பளை துர்கை அம்மன் ஆலயம், கொழும்பு விவேகானந்தா மண்டபம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் போன்ற பல இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காக 1972ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் வாழ் மக்களால் இசை நடிகமணி என்ற பட்டத்தையும் வடமராட்சி ஶ்ரீ நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையினரால் நாடக கலா ஜோதி என்ற பட்டத்தையும் மானிப்பாய் கிழக்கு சனசமூக நிலையத்தினரால் இசை நாடக அரசு என்ற பட்டத்தையும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 173