ஆளுமை:சிவராஜன், சிதம்பரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 19 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவராஜன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராஜன்
தந்தை சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1959.02.10
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராஜன், சிதம்பரப்பிள்ளை (1959.02.10 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. திருமதி கோகிலா மகேந்திரன், கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம், ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1960ஆம் ஆண்டுகளிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய இவர் பரத கலாநிவேதன் நாட்டியாலயத்தின் ஊடாக கலைத்துறைக்கு பணியாற்றியதோடு வட இலங்கை சங்கீத சபை ஊடாக பல பணிகளை ஆற்றியுள்ளார்.

இவரது சேவைக்காக வட இலங்கை சங்கீத சபையால் நாடக கலா வித்தகர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டில் கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் இவர் வெற்றிப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 165