ஆளுமை:சிதம்பரநாதன், வேலுப்பிள்ளை
பெயர் | சிதம்பரநாதன் |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1948.05.11 |
ஊர் | அல்வாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரநாதன், வேலுப்பிள்ளை (1948.05.11 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. க. செல்லத்துரை, ந. வெங்கையா, ஈ. செல்லையா, மு. நாகலிங்கம் ஆகியோரிடம் கலைப்பயிற்சிப் பெற்ற இவர் தனது 13ஆவது வயதிலிருந்து இசை, நாடகம், சிற்பம், கிராமியக் கலை போன்ற துறைகளின் மூலம் கலைச்சேவையை ஆற்றத் தொடங்கினார்.
மார்க்கண்டேயர், சத்தியவான் சாவித்திரி, சம்பூர்ண அரிச்சந்திரா, ஶ்ரீ வள்ளி போன்ற நாடகங்களை இவர் பழக்கி நடித்துள்ளதோடு இலங்கை வானொலியில் இவர் பல சந்தர்ப்பங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
இவரது கலைச்சேவைக்காக 1922ஆம் ஆண்டில் இளங் கலைஞர் பட்டமும் 1997ஆம் ஆண்டில் இளங் கலைவேந்தன் பட்டமும் 2002ஆம் ஆண்டில் மரபுக் கலைச்சுடர் பட்டமும் 2003ஆம் ஆண்டில் இசைநாடக கேசரி பட்டமும் 2005ஆம் ஆண்டில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் பட்டமும் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 158