ஆளுமை:கொன்ஸ்ரன்ரைன், வெளிச்சோர் யூலியஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:09, 18 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கொன்ஸ்ரன்ர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கொன்ஸ்ரன்ரைன்
தந்தை வெளிச்சோர் யூலியஸ்
பிறப்பு 1942.03.13
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கொன்ஸ்ரன்ரைன், வெளிச்சோர் யூலியஸ் (1942.03.13 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வெளிச்சோர் யூலியஸ். இவர் நாடகம், எழுத்துரு, அரங்க நிர்வாகம், நடிப்பு, ஒலி / ஒளி அமைப்பு, ஒப்பனை, தயாரிப்பு, மேடை அமைப்பு, நெறியாள்கை ஆகியவற்றில் நாட்டம் கொண்டு 1954ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

காசில்டா, கண் திறந்தது, அன்பில் மலர்ந்த அமர காவியம், அரச கட்டளை, வீரமாநகர், போன்ற நாடகங்களில் இவர் நடித்துள்ளதோடு சர்வாதிகாரி, தேன் விருந்து, கண்கள் எங்கே, இடிந்த கோவில் போன்ற பல நாடகங்களை நெறியாள்கை செய்துள்ளார்.

இவரது சேவைக்காக கலைஞானகேசரி என்ற பட்டமும், யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் யாழ் ரத்னா' என்ற பட்டமும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 152