ஆளுமை:குலசேகரம், இராமசாமி
பெயர் | குலசேகரம் |
தந்தை | இராமசாமி |
பிறப்பு | 1944.08.03 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குலசேகரம், இராமசாமி (1944.08.03 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இராமசாமி. இவர் சபாபதிப்பிள்ளை, சபாரத்தினம், தாமு பொன்னுத்துரை, வல்லிபுரம் சபாபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசை நாடகங்களைப் பயின்று 1952ஆம் ஆண்டில் காத்தவராயன் சிந்து நடைக்கூத்துல் நடித்தன் மூலம் நாடகத் துறைக்குள் பிரவேசித்தார்.
வள்ளி, சாவித்திரி, சீதை, சந்திரமதி, ஆரியமாலா, கிருஷ்ணர், பால காத்தான் உட்பட மேலும் பல நாடகங்களை வடமராட்சி, மானிப்பாய், நீர்வேலி, உடுவில், வசாவிளான், தெல்லிப்பளை, மல்லாவி, பம்பலப்பிட்டி, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இவர் நடித்துள்ளதோடு 1966ஆம் ஆண்டில் உருத்திராவத்தை இசை நாடக மன்றம், 1971ஆம் ஆண்டில் மாதனை கலைவாணி நாடக மன்றம் ஆகிய மன்றங்களை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டார்.
இவரது கலைப்பணியைப் பாராட்டி 2007இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 151