ஆளுமை:குகராஜா, மார்க்கண்டு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 14 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குகராஜா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குகராஜா
தந்தை மார்க்கண்டு
பிறப்பு 1950
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குகராஜா, மார்க்கண்டு (1950 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கடுவனைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மார்க்கண்டு. அரங்கம் என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர் யாழ்ப்பாண வீரசிங்க மண்டபம், கொழும்பு டவர் மண்டபம், சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், யாழ்ப்பாணம் நாடக அரங்கக் கல்லூரி, இலங்கை வானொலி, இலங்கை ரூபவாஹினித் தொலைக்காட்சி மற்றும் கிராமப்புறங்கள் எனப்பல இடங்களில் தனது கலைகளை காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் இவரது மக்களின் எதிரி என்னும் கசிப்பு ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் 300இற்கும் மேற்ப்பட்ட தடவைகள் அரங்கேற்றப்பட்டன.

இவரால் எழுதப்பட்ட பொறுத்தது போதும் என்னும் நாடகத்திற்கு கொழும்பு சாகித்திய விழாவின் போது ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. மேலும் இவரது வானொலி நாடகங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 150