ஆளுமை:உருத்திரேஸ்வரன், சதாசிவம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உருத்திரேஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | உருத்திரேஸ்வரன் |
தந்தை | சதாசிவம் |
பிறப்பு | 1947.05.28 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உருத்திரேஸ்வரன், சதாசிவம் (1947.05.28 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சதாசிவம். இவர் ஏ. தார்சீசியஸ், பேராசிரியர் மௌனகுரு, குழந்தை சண்முகலிங்கம், கலாநிதி சிதம்பரநாதன், எஸ். ரி. அரசு ஆகியோரிடம் இவர் கலைப்பயிற்சி பெற்று 1962ஆம் ஆண்டு தொடக்கம் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.
எழுத்தாளர் டொமினிக்கின் யார் கதாநாயகி, இலங்கை விவசாயக் கல்லூரி தமிழ் மன்றத்தால் நடாத்தப்பட்ட பேசாத தெய்வம், நாகவல்லி, மருதபாண்டியர் சரித்திர நாடகம் உட்பட 33 நாடகங்களில் இவர் நடித்தும் இயக்கியுமுள்ளார்.
இவரது திறமைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 137