ஆளுமை:உருத்திராபதி, கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உருத்திராப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உருத்திராபதி
தந்தை கந்தையா
பிறப்பு 1927.12.14
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உருத்திராபதி, கந்தையா (1927.12.14 - ) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், மானிப்பயை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் வட்டுக்கோட்டை சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றுள்ளார்.

இவர் செல்லையா அவர்களின் பாலபாஸ்கர சபாவில் இணைந்து அல்லி அர்ச்சுனா, ஞானசவுந்தரி, சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களிலும் 1953ஆம் ஆண்டிலிருந்து வி. வி. வைரமுத்துவின் வசந்தகான சபாவில் இணைந்து வள்ளித் திருமணம், பூதத்தம்பி, சாரங்கதாரா, கோவலன் கண்ணகி, பவளக்கொடி, மார்க்கண்டேயன், மயான காண்டம் போன்ற நாடகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவரது திறமைக்காக கலைச்சுடர், கலாபூஷணம் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 136-137