ஆளுமை:இராசேந்திரம், தீயோ முடியப்பு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:44, 12 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இராசேந்திரம் |
தந்தை | தீயோ முடியப்பு |
பிறப்பு | 1907.12.17 |
ஊர் | பாசையூர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசரத்தினம், தீயோ முடியப்பு (1907.12.17 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தீயோ முடியப்பு. இவர் தனது ஆரம்பக் கல்வியை பாசையூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும், கொழும்புத்துறை புனித சூசையப்பர் பாடசாலையிலும், பின்னர் மேற்ப்படிப்பை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கற்றார்.
இவர் 1930ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக்கூத்து அண்ணாவியாராக இருந்து நாடகங்களை உருவாக்கி தானும் அதில் நடித்து பல கலைஞர்களை உருவாக்கியதோடு பின்னர் பாஷையூர் வளர்பிறை நாடக மன்றத்தினை உருவாக்கி கண்டி அரசன், சத்தியானந்தன் ஆகிய இசை நாடகங்களையும், எஸ்தாக்கியார், மாணிக்கப்பரல் போன்ற நாட்டுக்கூத்துக்களையும் எழுதியுள்ளார்.
இவரது திறமைக்காக கலையரசு சொர்ணலிங்கம் அவர்களினால் நாடக பூஷணம் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 131-132