ஆளுமை:ஆறுமுகம், வல்லிபுரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:19, 10 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஆறுமுகம் |
தந்தை | வல்லிபுரம் |
பிறப்பு | |
இறப்பு | 2014.03.27 |
ஊர் | அல்லைப்பிட்டி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுகம், வல்லிபுரம் ( - 2014.03.27) யாழ்ப்பாணம், வேலணை, அல்லைப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட புலவர். இவரது தந்தை வல்லிபுரம். இவர் மண்டைதீவை சேர்ந்த குமாரவேற்பிள்ளை அவர்களின் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சீடனாக இருந்தார். பண்டிதராக விளங்கிய இவர் மாணவர்களுக்கு இலவசமாகவே கல்விபுகட்டினார்.
இவரது பல கவிதைகள், சிறுகதைகள் சுதந்திரன் உட்பட பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. 1987ஆம் ஆண்டு அடைப்புக்குறிகள் எனும் இவரது கவிதை தொகுதி ஒன்று வெளிவந்தது. இவரது விடுதலைக் கவிதை உணர்வினை பாராட்டும் முகமாக விடுதலைப் புலிகள் கலைப்பண்பாட்டுக் கழகம் 1991இல் கெளரவித்துள்ளது. 1993 இல் 'பக்கவாத்தியம் இல்லாத பாட்டுக்கச்சேரி' எனும் கவிதை தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 15-16