ஆளுமை:அரியநாயகம், எம்.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:01, 6 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அரியநாயகம் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரியநாயகம், எம். ஓர் நாடகக் கலைஞர். இவர் யாழ்ப்பாணத்தில் யாழ் நவரச நாடகாலயத்தின் மூலமக தனது முதலாவது நாடக அரங்கேற்றத்தை நாடகத் தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் தலமையில் ஆரம்பித்து அதனூடாக பல நாடகங்களை எழுதி இயக்கி அரங்கேற்றியுள்ளார்.
ஈழத்தில் "எழில்" என்ற கலை இலக்கியச் சஞ்சிகையை நடாத்திய இவர் பாரிஸிலும் இதனை சிலகாலம் நடத்தியுள்ளார். மேலும் பாரிஸீல் அதிக கலைஞர்களைக் கொண்டு அதிக பணச்செலவில் இவரால் அரங்கேற்றப்பட்ட யூலியர் சீசர் நாடகம் இவருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்துள்ளது. அத்தோடு 1984ஆம் ஆண்டில் இவரது தலமையில் உருவான ஐரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் பல படைப்பாளிகளின் ஆக்கங்களையெல்லாம் தொகுத்து நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 190-192