ஆளுமை:இரத்தினம், கதிர்காமு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினம்
தந்தை கதிர்காமு
பிறப்பு 1928.05.16
இறப்பு 2005.05.14
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரத்தினம், கதிர்காமு (1928.05.16 - 2005.05.14) யழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிர்காமு. கூத்துவழி அரங்கச் செயற்பாட்டில் நவீனமயப்படுத்தப்பட்ட நாடக வடிவான இசை நாடகங்களில் இவர் தன் ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் காங்கேசன்துறை வசந்தகால நாடக சபாவில் இணைந்து நாடகக் கலாநிதி நடிகமணியோடு புகழ் பெற்ற பல இசை நாடகங்களில் பெண் பாத்திரமேற்று ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேல் மேடையேறினார்.

சோகச் சோபித சொர்ணக் கவிக்குயில் எனப் பாராட்டுப் பெற்ற இவரை ஈழத்து கண்ணாம்பாள் என இந்திய நகைச்சுவை நடிகர் மல்லியம் இராஜகோபால் பட்டம் சூட்டிக் கௌரவித்துள்ளார். 2002ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை கலைஞானச்சுடர் விருதினையும் 2010ஆம் ஆண்டு இலங்கை அரசின் அதியுயர் விருதான கலாபூஷணம் விருதினையும் இவர் பெற்றுக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 155
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 129