ஆளுமை:ஶ்ரீதரன், வேதையா
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:21, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஶ்ரீதரன் |
தந்தை | வேதையா |
பிறப்பு | 1953.04.01 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீதரன், வேதையா (1953.04.01 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வேதையா. இவர் த. கிருஷ்ணமூர்த்திப்பிள்ளை, என். ஆர். சின்னராசா, கே. கணேசப்பிள்ளை, வி. கே. தட்சணாமூர்த்திப்பிள்ளை ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1965ஆம் ஆண்டிலிருந்து இத் துறையில் சேவையாற்றினார்.
ஆரம்பத்தில் என். ஆர். சின்னராசா குழுவினருடன் இணைந்து ஆலய உற்சவங்களில் தவில் வாசித்து வந்த இவர் பின்னர் தனது தலைமையில் கலைச்சேவைகளை ஆற்றியுள்ளார். இவரது சேவைக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினால் கலைச்சுடர், சர்வதேச இந்துமத குருபீடத்தினால் லயஞாணமணி போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 95