ஆளுமை:யோகன்கவாஸ், பிலிப்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=யோகன்கவாஸ்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகன்கவாஸ்
தந்தை பிலிப்
பிறப்பு 1951.04.26
ஊர் சில்லாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகன்கவாஸ், பிலிப் (1951.04.26 - ) யாழ்ப்பாணம், சில்லாலையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பிலிப். தனது 16ஆவது வயதிலிருந்து ஆர்மோனியம் வாசித்து வந்துள்ள இவர் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, வள்ளி திருமணம், ஏழுபிள்ளை நல்ல தங்காள், பூதத்தம்பி, பவளக்கொடி, அல்லி அர்ச்சுனா, ஞானசவுந்தரி போன்ற நாடகங்களிற்கு ஆர்மோனியம் வாசித்துள்ளதோடு கலைப்பண்பாட்டுக் கழகத்தின் பாடல்கள் பலவற்றின் இசையமைப்பாளராகவும், பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் கலைஞராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இவரது கலைப்பணிக்காக மரபுச்சுடர், ஆர்மோனியச் சக்ரவர்த்தி, ஆர்மோனிய வித்துவான் இசைவேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 112-113