ஆளுமை:பொன்னுத்துரை, செல்லர்
பெயர் | பொன்னுத்துரை
தந்தை=செல்லர் |
பிறப்பு | 1936.02.27 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னுத்துரை, செல்லர் (1936.02.27 - ) யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகக் கொண்ட ஆர்மோனிய இசைக்கலைஞர். இவரது தந்தை செல்லர். இவர் சிறுவயது முதல் வாத்திய இசையின் மீது ஆசை கொண்டு மென்ரலின் என்னும் இசைக் கருவியை வாங்கி சுயமாகவே அதனை இசைக்கத் தொடங்கியவர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசாரகராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற போதும் இசைக் கலையில் ஆர்வம் கொண்டு எகோடியன் என்னும் வாத்தியக் கருவியை கச்சேரிகளில் வாசித்து பாராட்டுதலை பெற்றிருக்கின்றார்.
ஆர்மோனியம் வாத்திய இசைக் கருவியை இவர் இசைக்க அரம்பித்த பின்னர் ஆர்மோனிய இசைக் கலையில் இவரது பாண்டித்தியத்தை கண்ணுற்றப் பலர் இவரை இசைநாடகங்களுக்கு பக்கவாத்தியக் கலைஞனாக அழைத்தனர். மேலும் ஓகன், மெலோடிக்கா ஆகிய வாத்திய இசைக் கருவிகளையும் முறையாகப் பயின்றார். இவர் பக்திப் பாமாலை என்னும் ஒலி நாடாவை யாழ்.இலக்கியவட்டத் தலைவர் செங்கை ஆழியானைக் கொண்டு வெளீயீடு செய்து வைத்ததோடு இப் பாமலையின் பின்னணி இசையை இவரே முன்னின்று செயற்படுத்தினார்.
1995ஆம் ஆண்டு அரியாலை காந்தி சனசமூக நிலைய கலை இலக்கியப் பேரவை இவருக்கு ஆர்மோனிய இசையரசு என்ற பட்டத்தையும், 2001ஆம் ஆண்டு இந்து சமய கலாசார அமைச்சு கலைஞான கேசரி என்ற பட்டத்தையும் 2002ஆம் ஆண்டு இந்து சமய கலாசார திணைக்களம் கலாபூஷணம் என்னும் தேசிய கலை விருதினையும், 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை கலைஞானச்சுடர் விருதினையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 93
- நூலக எண்: 15444 பக்கங்கள் 112