ஆளுமை:இராமநாதன், நடேசன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமநாதன்
தந்தை நடேசன்
பிறப்பு 1933.09.27
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமநாதன், நடேசன் (1933.09.27 - ) யழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை நடேசன். இவர் ப. யோகலிங்கம், எஸ். குமார் ஆகியவர்களிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1943ஆம் ஆண்டிலிருந்து கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார்.

தனது 10ஆவது வயதில் சைவ ஆலயங்களில் தவில் வாசித்து, 15ஆவது வயதில் கச்சேரி செய்தார். கோவில்களிலும், திருமண வைபவங்களிலும் தவில் வாசித்ததுடன் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தவில் வாசித்துள்ளார். இவரது சேவைக்காக லலித கலைமணி, கலாபூஷணம், லய ஞான பூபதி ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 93