ஆளுமை:பழனிமலை, குமாரவேலு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:11, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பழனிமலை| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பழனிமலை
தந்தை குமாரவேலு
பிறப்பு 1931.06.06
ஊர் மட்டுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பழனிமலை, குமாரவேலு (1931.06.06 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை குமாரவேலு. இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் இந்துக் கல்லூரியில் கற்ற காலத்தில் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும், சின்னத்துரை, இராஜகோபால் அவர்களிடமும் இசைப் பயின்றார். பின்னர் தனது 12ஆவது வயதில் இந்தியாவிற்கு சென்று அங்கும் இசைக் கல்விப் பயின்றார்.

முதன் முதலில் இணுவில் கந்தசாமி கோவிலில் தவில் வாசிக்கத் தொடங்கிய இவர் 1967ஆம் ஆண்டு தமிழ் இசை சங்கத்தின் ஆதரவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாதஸ்வரக் கச்சேரியில் தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களுடன் இணைந்து வாசித்தார். கொழும்பு ஆடிவேல் விழாவிற்கு வருகை தந்த இந்திய நாதஸ்வர மேதை திருமெஞ்ஞானம் நடராசா சுந்தரம்பிளளை அவர்களது நாதஸ்வரக் கச்சேரியில் தொடர்ந்து 3 தினங்கள் வாசித்துப் பாராட்டப்பட்டார். இவ்வாறு பல இசைக் கச்சேரிகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.

இவரது திறமைக்காக ஶ்ரீ கரலேக சுரதாளக்கிய கலிபுக வரத பால நந்தீஸ்வரன், லய நாத குரே பாரதி, கரலேக நரதசிம்மம், லயநாத விவாகார பாரதி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 97-98