ஆளுமை:கேதீஸ்வரன், இரத்தினவேலு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கேதீஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கேதீஸ்வரன்
தந்தை இரத்தினவேலு
பிறப்பு 1950.01.23
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேதீஸ்வரன், இரத்தினவேலு (1950.01.23 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினவேலு. இவர் அளவெட்டி ஞானோதயா வித்தியசாலையிலும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே சு. க. இராசா, கோண்டாவில் நாராயணப்பிள்ளை, நல்லூர் தெட்சணாமூர்த்தி ஆகியோரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்றார்.

1964 - 1998வரை என். கே. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து அவரது குழுவில் நாதஸ்வரம் வாசித்து வந்தார். 1975ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் வெஸ்ற் மினிஸ்டர் அபே என்னும் வரலாற்று புகழ் மையத்திலேயும் மதுரையில் மாண்புமிகு முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தலமையிலும் நடைப்பெற்ற அகில உலக தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவர் நாதஸ்வரம் வாசித்துப் புகழ் பெற்றார். மேலும் இவர் இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலும் தனது இசைப் புலமையை வெளிக்காடியுள்ளார்.

பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களால் சங்கீத நாத சாகரம், வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவையால் கலைச்சுடர், மகா வித்துவான் வீரமணி ஐயரால் நாத கலா ஞான நிதி, தெல்லிப்பளை காசி விநாயகர் ஆலயத்தினால் நாதஸ்வரகீதபானு, 2005ஆம் ஆண்டில் இலண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தினால் ஸ்வர ஞான நிதி போன்ற பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 85-86