ஆளுமை:மாதுசிரோண்மணி வேலாயுதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாதுசிரோண்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதுசிரோண்மணி வேலாயுதர்
பிறப்பு 1942.12.02
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதுசிரோண்மணி வேலாயுதர் (1942.12.02 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் தனது ஏழாவது வயதில் செல்வி முத்துலட்சுமி குழந்தைவேலு அவர்களிடமும் மாத்தளையில் திரு. என். ராஜு அவர்களிடமும் ஏழு ஆண்டுகள் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றார். பின்னர் தனது உயர் கல்வியை 1958இல் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார்.

1976ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியின் இசை ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் பின் 1978 - 1979வரை கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விசேட இசை பயிற்சி பெற்று 1980ஆம் ஆண்டு வவுனியா மகா வித்தியாலயத்திலும், 1985 - 2002 வரை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நடத்திய பரீட்சையில் சித்தி அடைந்து ரசிக ரஞ்சன சபா, அண்ணாமலை இசைத்தமிழ் மன்றம், ரஞ்ஜன சபா, தமிழிசை மன்றம் போன்றவற்றில் இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினால் சங்கீத பூஷணம் என்ற பட்டமும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தினல் கலா பூஷணம் என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 77