ஆளுமை:சிவசண்முகமூர்த்தி, நடேசன்
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:23, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவசண்முகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவசண்முகமூர்த்தி |
தந்தை | நடேசன் |
பிறப்பு | 1942.02.08 |
ஊர் | சுழிபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசண்முகமூர்த்தி, நடேசன் (1942.02.08 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர். இவரது தந்தை நடேசன். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளிடம் பயின்று சங்கீத கதாபிரசங்கம், நாட்டார் சொற்பொழிவு, கவிதை, வில்லுப்பாட்டு, கிரமிய நாடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபட்டார். முன்னாள் இலங்கை வானொலி 'கிராம சஞ்சிகை' நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 1986இல் மலேசியாவிலும், 2001இல் பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளிலும் கதாப்பிரசங்கங்களை நிகழ்த்தியுள்ளார். இவர் இந்து சமய கலாசார திணைக்களத்தினால் 'கலைஞான கேசரி' விருதையும் கொழும்பு சர்வதேச இந்துமத குருபீடத்தினால் 'சிவநெறி கலா நிதி' விருதையும் யாழ்ப்பாண இந்து சமய பேரவையால் 'சிவகலாபூஷணம்' விருதையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 61