ஆளுமை:சறோஜா, தம்பு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சறோஜா தம்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சறோஜா தம்பு
பிறப்பு 1942.10.24
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சறோஜா தம்பு (1942.10.24 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் சண்முகப்பிரியா சோமசுந்தரம், எஸ். கோவிந்தராஜ ஐயர், எம். எஸ். தண்டபாணி தேசிகர், ரி. கே. ரங்காச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார், மயிலம் வச்சிரவேலு முதலியார், வேணுகோபால் ஐயர் போன்றோரிடம் கர்நாடக சங்கீதத்தினையும், திருமதி கோமதி சங்கரஐயா, செல்வி கௌரிகுமாரி அம்மா ஆகியோரிடம் வீணையையும், திரு. இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும் வயலினையும் கற்று 1960 - 1964 வரை அண்ணாமலை பல்கலைக்கலகத்தில் இசைக் கல்வியையும் பயின்று தனது 7ஆவது வயதிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் 1969இல் மஸ்கலியாவில் ஆசிரியராகவும், 1980களில் தலவாக்கொல்லை, பண்டாரவளை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். மேலும் 1990இலிருந்து வடமராட்சி வலயக் கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், அழகியலுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தமிழிசைச் செல்வி, பண்ணிசைச் செல்வி, இசைவாணி, சங்கீதபூஷணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

{{வளம்|15444|59-60}

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சறோஜா,_தம்பு&oldid=168768" இருந்து மீள்விக்கப்பட்டது