ஆளுமை:ஞானமூர்த்தி, சண்முகம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானமூர்த்தி
தந்தை சண்முகம்பிள்ளை
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1905.10.01
ஊர் வல்வெட்டித்துறை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமூர்த்தி, சண்முகம்பிள்ளை (1905.10.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமூகசேவையாளர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; தாய் அன்னப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை வல்வை அ.மி.த.க. பாடசாலையிலும், உயர்கல்வியை சிதம்பராக் கல்லூரியிலும் பயின்றார். 1924ஆம் ஆண்டு அஞ்சல் திணைக்களத்தில் உதவி அஞ்சல் சேவையாளராகச் சேர்ந்து 1951இல் பரிசோதகராக பதவி உயர்வினைப் பெற்று 1963இல் தபால் திணைக்கள உதவி அத்தியட்சகராக பணியாற்றி 1965இல் அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் வல்லை நூற்றல் (நெய்தல்) ஆலையில் செயலாளராக பணியாற்றினார்.

இவர் யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலை மேற்பார்வைக் குழு அங்கத்தவராக 1966இல் தெரிவானார். சமாதான நீதிபதியாகக் கடமையாற்றியவர். தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கத்தில் பங்காற்றியதோடு வல்வை நகர முதல்வராகவும் பணிபுரிந்தார். இவர் செல்வச்சந்நிதி கோயிலின் ஆரம்பத் தேர்த்திருவிழாவில் 1925ஆம் ஆண்டு கட்டுத் தேரொன்றை அமைத்துக் கொடுத்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 57