ஆளுமை:பொன்னம்பலவாணர், தியாகராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலவாணர்
தந்தை தியாகராசா
பிறப்பு 1945.10.16
ஊர் சுழிபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலவாணர், தியாகராசா (1945.10.16 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் பொன்னாலை வரதராஜப் பெருமான் வித்தியாசாலை, யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் விக்றோறியாக் கல்லூரி, நல்லூர் குருகுலம் ஆகியவற்றில் தனது கல்வியை மேற்கொண்டார், மேலும் செ .துரைசிங்கம், பொன்முத்துக்குமாரன், யோகி கார்த்திகேசு, சி. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் கல்வி கற்றார்.

ஈழநாடு, முரசொலி பத்த்ரிகைகளில் பத்திரிகையாளராகக் கடமை புரிந்து கட்டுரைகளை எழுதி வந்துள்ள இவர் கோவில் புராணபடனம், பாடசாலை விழாக்களில் பேச்சு போன்றனவற்றை ஆற்றி வந்ததோடு, காசிகாண்ட செய்யுள்களை வசனமாக்கியமை, புட்பவிதி எனும் நூலிற்கு பொழிப்புரை எழுதியமை, பிள்ளையார் கதை விளக்கம், திருவாதவூரடிகள் புராண சிந்தனம் போன்றன இவரால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

தமிழ் பண்டிதர், சமஸ்கிருத பிரவேச பண்டிதர், பௌராணிக வித்தகர், சித்தாந்த மணி, கலைவாருதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 41