ஆளுமை:துரைசிங்கம், சுப்பர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைசிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைசிங்கம்
தந்தை சுப்பர்
பிறப்பு 1939.04.08
ஊர் கந்தரோடை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், சுப்பர் (1939.04.08 - ) யாழ்ப்பாணம், கந்தரோடையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது கல்வியை கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றார். மேலும் சி. ஆறுமுகம், பவுன் சுந்தரமூர்த்தி ஆதவன், சி. பொன்னம்பலம் ஆகியோரிடமும் தனது கல்வியைக் கற்றார். ஆசிரியராகவும், அதிபராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

1957ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றியுள்ள இவர் இலக்கியத்துறை, சமயத்துறை, நாடகத்துறை, ஒளி ஒளி இறுவெட்டுத் தயாரித்தல், சமயம், தொலைக்காட்சித் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் பத்திற்கு மேற்ப்பட்ட நூல்களையும், மூன்று கவிதை நூல்களையும் இவர் எழுதியுள்ளார். 1960ஆம் ஆண்டில் கலா நிலையத்தை நடாத்தி அதன் மூலம் நெறியாள்கை செய்தும் நடித்துள்ளார். இசைப் பாவலர், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் -32