ஆளுமை:தம்பையா, கதிர்காமு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பையா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பையா
தந்தை கதிர்காமு
பிறப்பு 1937.05.03
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பையா, கதிர்காமு (1937.05.03 - ) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிர்காமு. தனது ஆரம்பக் கல்வியை புற்றாளை வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கற்று எஸ். ஏஸ். சி. பரீட்சையில் சித்தியடைந்த இவர் 1956ஆம் ஆண்டில் நில அளவைத் திணைக்களத்தின் படவரைஞராக கடமையாற்றினார்.

1967ஆம் ஆண்டில் கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர் முப்பத்தேழு வருடங்களுக்கு மேலாக இத் துறையில் ஈடுபட்டு நினைவுச் சின்னம், அவனுக்கென்று ஒருத்தி, தேடிவந்த காதல் போன்ற நூற்றுக் கணக்கான சிறுகதைகளையும் நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 29-30