ஆளுமை:சிவபாதம், நமசிவாயம்
பெயர் | சிவபாதம் |
தந்தை | நமசிவாயம் |
பிறப்பு | 1932.12.05 |
ஊர் | அச்சுவேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவபாதம், நமசிவாயம் (1932.12.05 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நமசிவாயம். 1947ஆம் ஆண்டில் இவர் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே படித்துப்பார் என்னும் பொது அறிவு சார்ந்த நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து புத்தொளி மலர்ச்சி, மொழியும் நாடும், மிதிலைச் செல்வி, அப்பலோ, மலர்க தமிழீழம், நாளை நமதே, கட்டுரைக் கதம்பம், தமிழர் தலைமகள், ஜீ.ஜீ' தமிழ்த்தாயின் கண்ணீர், தமிழர் செல்வம், செல்வா, தூக்கில் பக்த்சிங், ஆசிரியருக்கு ஆசான், சைவத் திருமண முறைகள் ஆகிய நூல்களைஎ ழுதி வெளியிட்டார்.
1951ஆம் ஆண்டில் தேசாபிமானியில் பலிபீடம் எனும் தலைப்பில் இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. மேலும் பானுவின் திருமணம், வீரத்தமிழ் நங்கை, தரகர் வேலுப்பிள்ளை அம்மான், கலேஜ் காதல், சீதனமே ஆகிய சிறுகதைகளையும் இவர் வெளியிட்டுள்ளார். சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையால் சிறந்த எழுத்தாளனிற்கான விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 19-20