ஆளுமை:நடேசையர், கோதண்டராம ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடேசையர்
தந்தை கோதண்டராம
தாய் பகீரதம்மா
பிறப்பு 1887
இறப்பு 1947.11.07
ஊர் தஞ்சாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடேசையர், கோதண்டராம ஐயர் (1887 - 1947.11.07) தஞ்சாவூரைச் சேர்ந்த எழுத்தாளர்; பதிப்பாளர்; அரசியல்வாதி; இதழாசிரியர். இவரது தந்தை கோதண்டராம ஐயர்; தாய் பகீரதம்மாள். திரு. வி.க. கல்லூரியில் கல்வி பயின்றவர். சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழகத்தில் தனது பிறந்த இடமான தஞ்சாவூரில் "இந்திய வியாபாரிகள் சங்கம்" ஒன்றினை உருவாக்கி வெற்றிகரமாக இயக்கி வந்தவர். சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். "சுதந்திரப் போர்" (ஹட்டன்,1940), "வீரன்" (ஹட்டன் 1942) ஆகிய சஞ்சிகைகளும் இவர் நடத்தியுள்ளதோடு தனி ஆங்கிலப் பத்திரிகைகளான Indian Opinion, Indian Estate Labourer citizen, Forward ஆகிய மூன்று பத்திரிகைகளையும் நடத்தியுள்ளார்.

1910-ஆம் ஆண்டிலேயே வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகத்தில் தமிழர்களும் தடம் பதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில், 1914-இல் வணிகர்களுக்காக வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையை மாதம் இருமுறையும், பின்னர் வாரம் ஒரு முறையும் நடத்தினார். ஒற்றன் என்ற புதினத்தையும் எழுதினார்.

இவர் இலங்கையில் குடியேறியது முதல் மறையும் வரை ஒன்பது தமிழ் நூல்களையும் இரு ஆங்கில நூல்களையும் வெளியிட்டுள்ளார். "தோட்ட முதலாளிகள் இராச்சியம்" என்ற இவரது ஆங்கில நூல் பிரபல்யமானது. "நீ மயங்குவதேன்" என்ற கட்டுரை நூலை 1931 இல் எழுதி அவரது சகோதரி பிரஸ் வாயிலாக அச்சிட்டு வெளியிட்டவர். இந்நூலை அடுத்து அதன் இரண்டாம் பாகமெனக் கருதப்படக்கூடிய மற்றொரு நூலாக மார்ச் 1947இல் "வெற்றியுனதே" என்ற நூலை வெளியிட்டார். இறுதிகட்டுரை "ராமசாமி வேர்வையின் சரித்திரம்" என்பதாகும்.

1924-ஆம் ஆண்டு நடேசய்யர் இலங்கை சட்டசபையில் மலையகத் தமிழரின் சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு 1936ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அட்டன் தேர்தல் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். இலங்கை இந்தியக் காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டார். 1947 நாடாளுமன்றத் தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 52-53
  • நூலக எண்: 312 பக்கங்கள் 06-10
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 17-24