ஆளுமை:சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சத்தியசீலன், பாவிலுப்பிள்ளை
தந்தை பாவிலுப்பிள்ளை
பிறப்பு 1938.06.15
ஊர் அல்லைப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவிலுப்பிள்ளை சத்தியசீலன் (1938.06.15 - ) யாழ்ப்பாணம், வேலணை, அல்லைப்பிட்டியை சேர்ந்த கவிஞர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்புத்துறையில் கற்று பின் பயிற்றப்பட்ட ஆசிரியராக விளங்கியதோடு, பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்து பட்டதாரியகவும் விளங்கினார்.



இவர் சிறுவர்களுக்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங்குவதோடு மேலைநாட்டுப் பாணியில் இவர் அமைத்துள்ள விடுகதைப்பாக்கள் மிகுந்த ஓசை நயமும், நடிப்புணர்ச்சியும் கூடியவனவாக அமைந்துள்ளன. இவரது சிறுவர் படைப்புக்கள் சாகித்திய மண்டல பரிசில்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்கங்களில் இவரது சொற்சிலம்பம் பலரது கவனத்தையும் ஈர்க்கும். இவரது காவியமான அல்லைப்பிட்டி அருளப்பர் அம்மானை கத்தோலிக்க சமூகத்தராலும் நற்புலமை வாய்ந்தோராலும் விதந்து பாராட்டப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 19
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 16