ஆளுமை:சண்முகவடிவேல், சீவரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:37, 2 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகவடிவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகவடிவேல்
தந்தை சீவரத்தினம்
பிறப்பு 1940.11.09
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகவடிவேல், சீவரத்தினம் (1940.11.09 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சீவரத்தினம். இவர் இலங்கையர்கோன், சண்முகநாதன், சி.வைத்திலிங்கம், கே. வி. செல்லையா போன்றோரிடம் கல்விப் பயின்றார்.

1956ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கிய இவர் வானொலி நாடகம் எழுதுதல், மேடை நாடகம் எழுதுதல், சிறுகதை கட்டுரை எழுதுதல் ஆகிய பல்துறைப் பணிகளையும் ஆற்றியுள்ளார். 1968இல் ஈழகேசரி பொன்னையா ஞாபகார்த்த நாடகப் போட்டி, 1974இல் கூட்டுறவாளர் தினவிழா சிறுகதைப் போட்டி, 1976இல் கட்டுரைப் போட்டி, வலம்புரி நிறுவனத்தின் 3ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறுகதைப் போட்டி போன்ற பல போட்டிகளில் இவர் பங்குபற்றியுள்ளார்.

இவர் திருமுறைக் காவலர், திருநெறியத் தமிழ்ச்செம்மல், கலைஞானகேசரி, ஞான ஏந்தல், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 15-16