ஆளுமை:உமாபதிசிவம், வல்லிபுரம்
பெயர் | உமாபதிசிவம் |
தந்தை | வல்லிபுரம் |
பிறப்பு | 1932.02.22 |
ஊர் | சுழிபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
உமாபதிசிவம், வல்லிபுரம் (1932.02.22 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வல்லிபுரம். 1942ஆம் ஆண்டிலிருந்து இவர் கவிஞர், ஓவியர், நாடக ஆசிரியர், தயாரிப்பாளராக இருந்ததுடன் மிருதங்கம், கெஞ்சிரா போன்றவற்றின் வாத்தியக் கலைஞராகவும் திகழ்ந்தார். மேலும் தொலைக்கல்வி, திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இவர் திகழ்ந்தார்.
தாம் சார்ந்த கலையை இவர் மதுரைத் தமிழ் சங்கம், மதுரை வளவன் மன்றம், தியாகராஜா பல்கலைக்கழகம், பாடசாலைகள், ஆலயங்கள், சிவச்செல்வி கலாமன்றம், காந்திஜீ சனசமூக நிலையம், தனியார் வானொலி, தனியார் தொலைக்காட்சி, மகாநாட்டு மண்டபங்கள் போன்ற இடங்களில் ஆற்றுகைப்படுத்தி காட்சிப்படுத்தினார்.
இவரது கலைப்புலமையைப் பாராட்டி கலைமாமணி, நிருத்தியவேந்தர் போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டதோடு பொன்னாடைகள் போர்த்தியும், தங்கப்பதக்கங்கள் வழங்கியும் இவர் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 04