ஆளுமை:துரைரத்தினம், கதிரிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரைரத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைரத்தினம்
தந்தை கதிரிப்பிள்ளை
தாய் செல்லமுத்து
பிறப்பு 1930.08.10
இறப்பு 1995.09.23
ஊர் தொண்டமனாறு
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரிப்பிள்ளை துரைரத்தினம் (1930.08.10 - 1995.09.23) யாழ்ப்பாணம், தொண்டமனாற்றைச்சேர்ந்த வழக்கறிஞர்; ஆசிரியர். இவரது தந்தை கதிரிப்பிள்ளை; தாய் செல்லமுத்து. தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். எழுதுவினைஞராகத் தனது 17வது அகவையில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.

இவர் உடுப்பிட்டிக் கிராமசபைத் துணைத்தலைவராகச் செயலாற்றியதன் மூலம் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். இதனை 1956 இல் தந்தை செல்வாவின் வேண்டுகோளுக்கிணங்க பருத்தித்துறை வேலாயுதம் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றினார். 1963ம் ஆண்டு அரச பிரதி நிதியாக இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தி அங்கிருந்து சிலரக முந்திரிகைச் செடிகளைக் கொண்டு வந்து யாழ் குடா முழுவதும் அறிமுகப்படுத்தி யாழ்வாசிகள் கோடான கோடி ரூபாக்களை உழைக்க வழி கோலியவர். பனை அபிவிருத்தி, தேக்குமரம், வெங்காயம், உருளைக்கிழங்கு இப்படி பலவற்றுக்கும் ஆலோசனை வழங்கி தானும் பயிர் செய்கையில் ஈடுபட்டவர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி (சமஷ்டிக் கட்சி) ஆரம்பித்த காலத்திலேயே அக்கட்சியில் இணைந்தார். 1960 மார்ச் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். பின்னர் யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவினர். 1977 தேர்தலில் இவர் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 55