ஆளுமை:ஏகாம்பரம், நா.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ஏகாம்பரம் |
பிறப்பு | 1844.03.23 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏகாம்பரம் (1844.03.23 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் தமிழ் பயின்ற பின் வட்டுக்கோட்டையில் ஆங்கிலம் கற்றார். சென்னைக்குச் சென்று பிரவேச பரீட்சையிற் சித்தியெத்தினார். ஆங்கிலக் கற்றலை விடுத்துத் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்க விரும்பி இந்தியாவில் வித்துவான்களாக இருந்த திருவாளர்கள் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, இராஜகோபாலபிள்ளை, இராமலிங்க பிள்ளை என்பவர்களிடம் சிலகாலம் கற்றர். இவர் அட்டாவதானமுஞ் செய்யப் பயின்று கொண்டு இலங்கையில் முதல் அட்டாவதானஞ் செய்த பெரியாராவார். பிற ஊர்களான கொழும்பு, கண்டி, மட்டக்களப்பிலும் அட்டாவதானஞ் செய்து காண்பித்துப் பரிசு பெற்றவர். வெண்பாவும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 213-214
- நூலக எண்: 963 பக்கங்கள் 51
- நூலக எண்: 4192 பக்கங்கள் 28