ஆளுமை:வேணி, கிருபாகரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேணி கிருபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேணி கிருபாகரன்
தந்தை சின்னத்தம்பி
தாய் செல்லக்கிளி
பிறப்பு
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேணி கிருபாகரன் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் செல்லக்கிளி. இவர் தனது ஆரம்பக் கல்வியை மட்டுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசலையிலும், யாழ்ப்பாணம் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்திலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பட்டப்படிப்பினை யழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்து தமிழில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்று கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு கல்வியியல் உயர்தகுதித் தராதரப் பட்டமும் பெற்றுக் கொண்டார். தனது பட்டப்படிப்பின் பின் 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை ஆசிரியராகச் சேவையாற்றியுள்ளார்.

முதலில் மட்டுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 1998ஆம் ஆண்டு முதல் நியமனத்தைப் பெற்றார். பின்னர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரை முல்லைத்தீவு உடையர்க்கட்டு மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமைபுரிந்துள்ளார். இவரது முதலாவது ஆக்கமான பெண் என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சுதந்திர பறவைகள் என்ற சஞ்சிகையில் 1991ஆம் அண்டு பங்குனி மாதம் வெளிவந்தது. மண் (ஜேர்மனி), எரிமலை (பிரான்ஸ்) ஆகிய இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 96-98
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேணி,_கிருபாகரன்&oldid=168173" இருந்து மீள்விக்கப்பட்டது